/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சுவர் விளம்பரம் வரைய பணம் வினியோகம்
/
சுவர் விளம்பரம் வரைய பணம் வினியோகம்
ADDED : ஏப் 04, 2024 10:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், ஒட்டுச்சாவடிகளுக்கு, சுவர் விளம்பரம் வரையும் பணிக்காக, தி.மு.க., சார்பில், ஒரு பூத்திற்கு 7,000 ரூபாய்வினியோகம் செய்யப் பட்டு உள்ளது.
இதேபோல், அ.தி.மு.க.,வினர் சார்பில், ஒரு பூத்திற்கு 10,000 ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. இதில், அ.தி.மு.க.,வினர், முழுமையாக பணம் கிடைக்கவில்லை என, அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
தி.மு.க., தரப்பில், ஆளும் கட்சியாக இருந்தும், தேர்தல் செலவுக்கு குறைவாக பணம் கொடுத்ததால், சுவர் விளம்பரம் வரைதல் மற்றும் பிரசார பணிகளில் சுணக்கமாக செயல்படுவதாக கூறப்படுகிறது.

