/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டுமான பணிகள் துவக்கம்
/
மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டுமான பணிகள் துவக்கம்
ADDED : செப் 07, 2024 07:31 AM

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அடுத்த மலையடிவேண்பாக்கம் கிராமத்தில், மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்க, 10 ஏக்கர் நிலத்தை, வருவாய்த்துறையினர் விளையாட்டுத் துறைக்கு ஒதுக்கீடு செய்தனர்.
அதன்பின், மாவட்ட விளையாட்டு வளாகம் கட்ட, 15 கோடி ரூபாய் நிதியை, அரசு ஒதுக்கீடு செய்தது. இங்கு, விளையாட்டு அரங்கம், உள் விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம், ஓடுதளம் ஆகியவை அமைகின்றன.
இப்பணிக்கு, தனியார் ஒப்பந்ததாரருக்கு டெண்டர் விடப்பட்டது. இப்பணியை, கடந்த மார்ச் 15ம் தேதி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார். அதன்பின், விளையாட்டு வளாக பகுதியில் சுற்றுச்சுவர், அரங்கம் கட்டுமான பணி, குளம் ஆகிய பணிகள் துவங்கி, தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விளையாட்டுத் துறை அதிகாரி ஒருவர், “புதிய விளையாட்டு வளாகம் அமைக்கும் பணிகள் துவங்கி, தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை, அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முடித்து, விளையாட்டு வளாகம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்,” என்றார்.