/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மையம் துவக்கம்
/
செங்கை அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மையம் துவக்கம்
செங்கை அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மையம் துவக்கம்
செங்கை அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மையம் துவக்கம்
ADDED : பிப் 27, 2025 10:42 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் துவக்க விழா, நேற்று நடந்தது.
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில், மனநல மருத்துவத்துறை சார்பில், கலங்கரை ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் துவக்க விழா, நேற்று நடந்தது. இந்த மையத்தை, கலெக்டர் அருண்ராஜ் பங்கேற்று திறந்து வைத்து பேசியதாவது:
ஒருங்கிணைந்த போதை மீட்பு கிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் போதை பழக்கம், மதுவால் அடிமையானவர்களுக்கு, சிகிச்சை அளிக்க, 25 படுக்கை வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. இம்மையத்தில், நோயாளிகள் உதவியாளர்கள் இல்லாமல், டாக்டர்கள், செவிலியர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.
சிகிச்சை முடிந்து செல்பவர்கள், சமூகத்தில் நல்ல நிலையில் வழலாம். இதை, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இதில், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, மருத்துவமனை முதல்வர் சிவசங்கர், துணை முதல்வர் அனிதா, மருத்துவ கண்காணிப்பாளர் ஜோதிகுமார், டாக்டர் சுதாகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.