/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீடு தாமதமானதால் ரூ. 2 லட்சம் இழப்பீடு
/
வீடு தாமதமானதால் ரூ. 2 லட்சம் இழப்பீடு
ADDED : ஏப் 08, 2024 11:37 PM
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த படூர் பகுதியில், 'பசிபிகா இன்பிராஸ்டிரக்சர்' நிறுவனம் சார்பில் ஆடம்பர குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில், வில்லா வகை பங்களா வீடு வாங்க, மோகன் குமார், ஜெயலட்சுமி ஆகியோர், கூட்டாக ஒப்பந்தம் செய்தனர்.
இதற்காக, அவர்கள் இணைந்து, 1.12 கோடி ரூபாயை கட்டுமான நிறுவனத்திடம், 2013ல் செலுத்தினர். இது தொடர்பான ஒப்பந்தப்படி, அந் நிறுவனம், 2015ல் வீட்டை ஒப்படைத்து இருக்க வேண்டும்.
ஆனால், அந்த நிறுவனம் குறிப்பிட்ட காலத்தில் கட்டுமான பணிகளை முடித்து வீட்டை ஒப்படைக்கவில்லை. இது தொடர்பாக, மோகன்குமார், ஜெயலட்சுமி ஆகியோர் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் முறையிட்டனர்.
இந்த மனு தொடர்பாக, ரியல் எஸ்டேட் ஆணைய, விசாரணை அலுவலர் என்.உமாமகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு:
ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்தில் வீட்டை ஒப்படைக்காத நிறுவனம், 5 லட்ச ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என, மனுதாரர்கள் முறையிட்டுள்ளனர்.
இரண்டு தரப்பு நிலவரத்தையும் விசாரித்து அறிந்ததன் அடிப்படையில், மனுதாரருக்கு, 2 லட்ச ரூபாய் இழப்பீடு, வழக்கு செலவுக்கு, 25,000 ரூபாயை கட்டுமான நிறுவனம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில்குறிப்பிடப்பட்டுள்ளது.

