/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விரிவாக்க பணிக்கு கால்வாய் அகற்றம் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
/
விரிவாக்க பணிக்கு கால்வாய் அகற்றம் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
விரிவாக்க பணிக்கு கால்வாய் அகற்றம் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
விரிவாக்க பணிக்கு கால்வாய் அகற்றம் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
ADDED : ஜூலை 17, 2024 01:06 AM

மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறமும், 200க்கும் மேற்பட்ட வணிக கட்டடங்கள், உணவகங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்உள்ளிட்டவை உள்ளன.
இங்கு, திருக்கச்சூர், தெள்ளிமேடு, செட்டிப்புண்ணியம், ஆப்பூர் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தினமும் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு வந்துசெல்கின்றனர்.
இந்த சாலையில்,தாம்பரம் மார்க்கத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாசலில், கழிவுநீர் ஆறுபோல் வழிந்து ஓடுகிறது.
அதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவ தால், அந்த வழியாக செல்வோர் மற்றும் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள்,மூக்கை பொத்தியபடி கழிவு நீரில் உள்ள கற்களை பயன்படுத்தி செல்லும் நிலை உள்ளது.
இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்கப் பணிகளின் போது, இந்த பகுதியில் பயன் பாட்டில் இருந்த கழிவுநீர் கால்வாய்கள் அனைத்தும் அகற்றப்பட்டன.
ஆனால், விரிவாக்கப் பணி முடிந்தும், புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால், பல இடங்களில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி, பள்ளமான பகுதிகளில் தேங்குகிறது. அதனால், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, கழிவு நீர் வழிந்து செல்வதை தடுக்க, மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.