ADDED : மார் 02, 2025 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடி, நேரு நகரைச் சேர்ந்தவர் கார்த்திக், 25; தனியார் நிறுவன ஊழியர்.
இவரது தந்தை ஸ்ரீனிவாசன், 61. நேற்று முன்தினம் இரவு, ஸ்ரீனிவாசன் அம்பத்துார் மார்க்கெட் சென்று, மின்சார ரயிலில் திருமுல்லைவாயில் ரயில் நிலையம் வந்துள்ளார்.
அங்கு சிறிது நேரம் அமர்ந்திருந்தவர், இரவு 8:45 மணிக்கு வீட்டுக்கு செல்ல, தண்டவாளத்தை கடந்துள்ளார்.
அப்போது, சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற மின்சார ரயிலில் அடிபட்டு, பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த ஆவடி போலீசார், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.