/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு அறையில் வைப்பு
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு அறையில் வைப்பு
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு அறையில் வைப்பு
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு அறையில் வைப்பு
ADDED : மார் 22, 2024 09:43 PM

திருப்போரூர்:திருப்போரூர் சட்டசபை தொகுதியில், 318 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. நேற்று, திருப்போரூர் தாலுகா அலுவலகத்திற்கு, மறைமலை நகர் நகராட்சி அலுவலகத்திலிருந்து, லோடு வாகனத்தின் வாயிலாக, 383 ஓட்டுப்பதிவு இயந்திரம், 383 கட்டுப்பாட்டு கருவி, 414 வி.வி.பேட் கருவிகள், போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன.
தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், வாகனத்தில் சீலை அகற்றி, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை இறக்கி, பாதுகாப்பாக அறையில் வைக்கப்பட்டது.
பின், அந்த அறை மூடி முத்திரையிடப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தாசில்தார் பூங்கொடி, மண்டல துணை தாசில்தார்கள் ஜீவிதா, சையது அலி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.