/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உடலில் மின்சாரம் பாய்ச்சி பொறியாளர் தற்கொலை
/
உடலில் மின்சாரம் பாய்ச்சி பொறியாளர் தற்கொலை
ADDED : பிப் 25, 2025 11:55 PM
பெருங்களத்துார்,பெருங்களத்துார், கிருஷ்ணா சாலையை சேர்ந்தவர் வெங்கடேஷ், 40. அவரது மனைவி கிருத்திகா, 40. இருவரும் மென் பொறியாளர்கள்.
கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கிருத்திகா கணவரை பிரிந்து, அதே பகுதியில் உள்ள தாய் வீட்டில், நான்கு ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
அதிக கடன் தொல்லை மற்றும் மனைவி உடன் இல்லாததால், வெங்கடேஷ் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த வெங்கடேஷ், தனக்கு தானே உடலில் மின் வடத்தை சுற்றிக்கொண்டு, மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்துகொள்ளும் முன், தன் மனைவியின் மொபைல் போனுக்கு, 'எமர்ஜென்சி' என, குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.
இந்த குறுந்தகவலை சற்று தாமதமாக பார்த்த கிருத்திகா, அது குறித்து தனது தந்தையிடம் கூறியுள்ளார். அவர், வெங்கடேஷ் வீட்டிற்கு சென்ற போது, கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.
கதவை உடைத்து பார்த்த போது, வெங்கடேஷ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.

