/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முத்துவிநாயகபுரம் பகுதியில் சாலை அமைக்க எதிர்பார்ப்பு
/
முத்துவிநாயகபுரம் பகுதியில் சாலை அமைக்க எதிர்பார்ப்பு
முத்துவிநாயகபுரம் பகுதியில் சாலை அமைக்க எதிர்பார்ப்பு
முத்துவிநாயகபுரம் பகுதியில் சாலை அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 01, 2024 02:39 AM

சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த கயப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துவிநாயகபுரம் பகுதியில், 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.
அச்சிறுபாக்கம் - போந்துார் சாலையில் இருந்து, குடியிருப்புப் பகுதிக்கு செல்லும் பாதை உள்ளது. பல ஆண்டுகளாக, இப்பகுதியில் சாலை வசதி இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
மேலும், மழைக் காலங்களில் பாதையில் தண்ணீர் தேங்குவதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். சிமென்ட் சாலை அமைக்க, பல முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, அப்பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, முத்துவிநாயகபுரம் பகுதியில், சிமென்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.