/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல்பாக்கம் ஊழியர் பேருந்துகளில் சிசிடிவி பொருத்த எதிர்பார்ப்பு
/
கல்பாக்கம் ஊழியர் பேருந்துகளில் சிசிடிவி பொருத்த எதிர்பார்ப்பு
கல்பாக்கம் ஊழியர் பேருந்துகளில் சிசிடிவி பொருத்த எதிர்பார்ப்பு
கல்பாக்கம் ஊழியர் பேருந்துகளில் சிசிடிவி பொருத்த எதிர்பார்ப்பு
ADDED : மே 24, 2024 09:47 PM
கல்பாக்கம்:கல்பாக்கத்தில், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், சென்னை அணுமின் நிலையம், பாபா அணு ஆராய்ச்சி மையம், அணுக்கரு மறுசுழற்சி மையம், பாவினி அணுமின் நிறுவனம் உள்ளிட்டவை இயங்குகின்றன.
அவற்றில் பணிபுரியும் ஊழியர்கள், அணுசக்தி துறை கல்பாக்கம், அணுபுரம் ஆகிய நகரியங்களில் வசிக்கின்றனர். அவர்கள் நகரிய பகுதிகளிலிருந்து, அணுசக்தி தொழில் வளாகம் சென்று திரும்ப, ஒப்பந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அவற்றின் சில நடைகளில், தனியார் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்களும் செல்கின்றனர். ஆண், பெண் பயணம், அணுசக்தி பகுதியில் இயங்குவது ஆகிய சூழலில், பேருந்துகளில் கண்காணிப்பு கேமிராக்கள் இல்லை.
அவ்வப்போது, ஒப்பந்த தொழிலாளர்களை அனுமதிக்க மறுப்பது உள்ளிட்ட பிரச்னைகளால், நிர்வாகம், தொழிலாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டு, போராட்டங்கள் நடந்துள்ளன.
சி.ஐ.எஸ்.எப்., படை தலைமைக் காவலர் ரவிகிரண், கடந்த மே 19ம் தேதி, ஒப்பந்த பேருந்தில் சென்றபோது, எதிர்பாராமல் துப்பாக்கி வெடித்து இறந்தார்.
அவ்வாறு வெடித்தது தற்செயலா, தற்கொலை முயற்சியா என்பது கேள்விக்குறியாக உள்ளது. பேருந்தில் கண்காணிப்பு கேமிரா இருந்திருந்தால், உண்மை நிலை தெரிந்திருக்கும்.
இத்தகைய சூழல்கள் கருதி, நிறுவன ஒப்பந்த பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என, ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

