/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வெள்ளரி சாகுபடியில் அசத்தும் அச்சிறுபாக்கம் விவசாயிகள்
/
வெள்ளரி சாகுபடியில் அசத்தும் அச்சிறுபாக்கம் விவசாயிகள்
வெள்ளரி சாகுபடியில் அசத்தும் அச்சிறுபாக்கம் விவசாயிகள்
வெள்ளரி சாகுபடியில் அசத்தும் அச்சிறுபாக்கம் விவசாயிகள்
ADDED : ஏப் 09, 2024 11:40 PM

அச்சிறுபாக்கம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரசங்கால், வெளியம்பாக்கம், நெடுங்கல் உள்ளிட்ட பகுதிகளில், கோடைக்கால பயிரான கொடி வெள்ளரி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து வெளியம்பாக்கத்தைச் சேர்ந்த விவசாயி சத்யராஜ் கூறியதாவது:
கோடைக்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, குறைந்த நாளில் மகசூல் பெறும் வகையில், தோட்டக்கலை பயிரான கொடி வெள்ளரி பயிரிடப்படுகிறது. 1 ஏக்கர் கொடி வெள்ளரி பயிர் செய்ய அரை கிலோ விதை தேவைப்படுகிறது.
அரை கிலோ விதை வாங்க, 850 ரூபாய் செலவாகிறது. விதை நடவு செய்யப்பட்ட நாளிலிருந்து 45வது நாளில் அறுவடைக்கு தயாராகிவிடும்.
தொடர்ந்து, 40 நாட்க ளுக்கு மேல் கொடி வெள்ளரி சாகுபடி நடக்கும். மேலும், அறுவடை செய்யப்படும் இடங்களுக்கே வியாபாரிகள் சென்று வாங்குகின்றனர். இதனால், விவசாயிகளுக்கு அலைச்சல்குறைவு. 1 கிலோ கொடி வெள்ளரி 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. தினமும், 30 கிலோ வரை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
மேலும், கோடைக் காலம் என்பதால் விளைச்சல் குறைவு. இதனால், கூடுதல் விலை கிடைத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைவர்.
இவ்வாறு அவர்கூறினார்.

