/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்மாற்றியில் தென்னை ஓலை உரசி தீ விபத்து
/
மின்மாற்றியில் தென்னை ஓலை உரசி தீ விபத்து
ADDED : ஏப் 06, 2024 12:11 AM
திருப்போரூர்:திருப்போரூர் காவல் நிலைய நுழைவாயில் அருகே, சாலை ஓரத்தில் மின்மாற்றி உள்ளது. அதே இடத்தின் சுற்றுச்சுவரின் உட்பகுதியில், தென்னை மரம் உள்ளது.
இந்நிலையில், நேற்று காலை அதிக காற்று வீசியபோது, தென்னை மரத்தின் ஓலை மின்மாற்றியில் உரசி, திடீரென தீப்பிடித்து எரிந்தது.
உடனே, திருப்போரூர் மின் வாரியத்திற்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மின் வாரியத்தினர் உடனே வந்து மின்சாரத்தை துண்டித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தண்ணீர் பீய்ச்சி அடித்து, தென்னை மரத்தின் ஓலையில் பற்றிய தீயை அணைத்தனர்.
பின், மீண்டும் தென்னை ஓலை மின்மாற்றியில் உரசாமல் இருக்க, ஓலைகள் அனைத்தும் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன.

