ADDED : ஜூன் 07, 2026 11:43 PM
செங்கல்பட்டு, ஜூன் 8-–
செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த லாரி தீப்பற்றி எரிந்தது.
செங்கல்பட்டு அடுத்த பரனுார் – ஜி.எஸ். டி., சாலையோரம் செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அதே பகுதியில் கொட்டப்பட்டிருந்த குப்பை கழிவுகளில், மர்ம நபர்கள், நேற்று மாலை தீ வைத்துள்ளனர்.
அப்போது தீ மளமளவென பரவி அருகில் நிறுத்தப்பட்டிருந்த ‘அசோக் லேலண்ட்’ லாரியில் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த
மறைமலை நகர் தீயணைப்பு படை வீரர்கள், அரை மணி நே ரத்தில் தீயை அணைத்தனர்.
நல்வாய்ப்பாக அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தனியார் தொழிற்சாலை பேருந்துகளில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
