/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவில் குளத்தில் மீன்கள் இறப்பு மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு
/
கோவில் குளத்தில் மீன்கள் இறப்பு மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு
கோவில் குளத்தில் மீன்கள் இறப்பு மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு
கோவில் குளத்தில் மீன்கள் இறப்பு மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு
ADDED : மார் 03, 2025 11:37 PM
திருப்போரூர், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலை ஒட்டி, சரவண பொய்கை குளம் அமைந்துள்ளது.
பக்தர்கள் இக்குளத்தில் நீராடி, கந்த பெருமானை வழிபட்டு செல்கின்றனர்.
கடந்த 400 ஆண்டுகளாக வற்றாத நிலையில் உள்ள இந்த திருக்குளம், இப்பகுதி மக்களின் முக்கிய நீராதாரமாகவும் உள்ளது.
கோவிலைச் சுற்றியுள்ள வீடுகளில் கிணறு, போர்வெல் ஆகியவற்றுக்கு, நிலத்தடி நீர் மட்டத்தை குறையாமல் பார்த்துக் கொள்வதில், இந்த திருக்குளம் முக்கிய பங்காற்றுகிறது.
இந்நிலையில், இக்குளத்தில் சில நாட்களாக மீன்கள் செத்து மிதந்தன. கோவில் நிர்வாகம் சார்பில் செத்து மிதந்த மீன்களை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
எனினும், மீன்கள் இறந்ததற்கான காரணம் குறித்து கண்டறிய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து நேற்று மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.
ஆய்வில், நீரின் அளவு குறைந்துவருதல், நீரில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைவு போன்ற காரணங்களால் மீன்கள் இறந்திருக்கலாம் என கூறப்பட்டது. மேலும் இதற்கான காரணங்களை உறுதிப்படுத்த நீர் மற்றும் இறந்த மீன்கள் பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டது.