ADDED : ஜூன் 27, 2026 07:10 PM
அ நிறம் | அளவு
சிங்கபெருமாள் கோவில், ஜூன் 28-–
சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலையில், வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிங்கபெருமாள் கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜி.எஸ்.டி., சாலையில், இரவு நேரங்களில் 4 பேர் கொண்ட கும்பல்
வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் சிங்கபெருமாள் போலீசாரிடம் புகார் அளிளித்தனர்.
இதையடுத்து, 25ம் தேதி 17 வயது சிறுவன் உட்பட மூவரை போலீசார் கைது செய்து 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய ஒருவரை தேடிவந்த நிலையில், பெருமாட்டுநல்லுாரில் பதுங்கிய திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆகாஷ், 21, என்ற நபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
