/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வண்டலுாரில் குப்பை தேக்கம் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்
/
வண்டலுாரில் குப்பை தேக்கம் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்
வண்டலுாரில் குப்பை தேக்கம் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்
வண்டலுாரில் குப்பை தேக்கம் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்
ADDED : மார் 28, 2024 10:10 PM

கூடுவாஞ்சேரி:வண்டலுாரில் தேங்கி யுள்ள குப்பையைஅகற்ற, ஊராட்சி நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை, வண்டலுார் ஜி.எஸ்.டி., சாலை இரணியம்மன் கோவில் அருகில் உள்ள முத்தமிழ் நகரில் சேகரிக்கப்படுகிறது.
சேகரித்து குவிக்கப்பட்டுள்ள குப்பையை அகற்றி, குப்பைக் கிடங்கிற்கு அனுப்பி வைப்பது வழக்கம். தற்போது, சேகரிக்கப்பட்ட குப்பையை அகற்றாததால், குப்பை மலை போல் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அருகில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு தொற்றுநோய்பரவும் அபாயம் உள்ளது.
கொசுத் தொல்லை,துர்நாற்றம் ஆகியவற்றால், அப்பகுதிவாசிகள் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, தேங்கியுள்ள குப்பையை அகற்றி, சுகாதார சீர்கேடு ஏற்படாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.

