/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பல்லாவரம் ஏரியில் குப்பை அகற்றம்
/
பல்லாவரம் ஏரியில் குப்பை அகற்றம்
ADDED : ஏப் 26, 2024 08:52 PM

பல்லாவரம்:பல்லாவரம் ---- துரைப்பாக்கம் சாலையில், பல்லாவரம் பெரிய ஏரி இரண்டு பகுதியாக பிரிந்து உள்ளது. ஒரு பகுதியில், நகராட்சி குப்பை கிடங்கும், மற்றொரு பகுதி, பல ஆண்டுகளாக துார் வாரப்படாமலும் இருந்தது.
இந்த நிலையில், உலக வங்கி நிதி, 14.98 கோடி ரூபாய் செலவில், பல்லாவரம், கீழ்க்கட்டளை ஏரிகளை புனரமைக்கும் பணி, 2019ல் நடந்தது.
இந்த நிதியில், ஏரியை துார்வாரி ஆழப்படுத்துதல், கரையை பலப்படுத்தி, கருங்கற்கள் பதித்தல், மதகு அமைத்தல், கழிவுநீர் கலப்பதை தடுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பணி முடிந்தவுடன், கழிவுநீர் கலப்பது 1 சதவீதம் கூட இருக்காது என, அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், வழக்கம் போல் கழிவுநீர் கலந்து ஏரி நாசமடைந்தது. மற்றொரு புறம், முழுதும் ஆகாயத் தாமரை வளர்ந்து மூடியது. கரையில் செடி, கொடிகள் வளர்ந்து புதராக மாறியது.
சமீபத்தில், தனியார் நிறுவனத்தின் 50 லட்சம் ரூபாய் சி.எஸ்.ஆர்., நிதியில், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் வாயிலாக ஏரியை புனரமைக்கும் பணி நடந்தது.
இந்த நிலையில், ரேடியல் சாலையின் வலது புறத்தில் உள்ள ஏரியில் தேங்கியிருந்த குப்பை, கழிவுகளை, மாநகராட்சி சுகாதாரத் துறையினர், பொக்லைன் இயந்திரம் வாயிலாக அகற்றி சுத்தப்படுத்தினர்.

