/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஒரத்தி காவல் நிலைய எல்லையில் தொடர்ந்து வெள்ளாடுகள் திருட்டு
/
ஒரத்தி காவல் நிலைய எல்லையில் தொடர்ந்து வெள்ளாடுகள் திருட்டு
ஒரத்தி காவல் நிலைய எல்லையில் தொடர்ந்து வெள்ளாடுகள் திருட்டு
ஒரத்தி காவல் நிலைய எல்லையில் தொடர்ந்து வெள்ளாடுகள் திருட்டு
ADDED : மார் 15, 2025 01:49 AM

அச்சிறுபாக்கம்,:ஒரத்தி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், இரவு நேரங்களில் தொடர்ந்து வெள்ளாடுகள் திருடு போவதால், கால்நடை வளர்ப்போர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் ஒரத்தி, வடமணிப்பாக்கம், களத்துார், அனந்தமங்கலம், காட்டு பிள்ளையார் கோவில், விண்ணம்பூண்டி, பெரும்பேர் கண்டிகை சுற்றுவட்டாரப் பகுதிகளில், விவசாயம் பிரதான தொழில்.
இதற்கு அடுத்தபடியாக, கால்நடைகள் வளர்ப்பு தொழிலில் விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அங்கு பசு, செம்மறி ஆடு, வெள்ளாடு வளர்ப்பு அதிகமாக உள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக, ஒரத்தி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சுற்று வட்டார பகுதி கிராமங்களில், இரவு நேரங்களில் கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டுள்ள வெள்ளாடுகளை, காரில் வரும் மர்ம நபர்கள் திருடிச் செல்வது வாடிக்கையாக உள்ளது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெள்ளாடுகள் திருடப்படுவதால், அதுகுறித்து ஒரத்தி போலீசார், அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில், இரவு நேரங்களில் சந்தேகிக்கும் வகையில், 'ரெனால்ட் மகேந்திரா லோகன்' கார் ஒன்று சுற்றி வருவதைக் கண்டறிந்து உள்ளனர்.
மேலும், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு, ஆடுகளைத் திருடும் அந்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
இதனால், வெள்ளாடுகள் வளர்ப்போர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு, ஒரத்தி போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.