/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு பேருந்து இயந்திர கோளாறு கூடுவாஞ்சேரியில் பயணியர் தவிப்பு
/
அரசு பேருந்து இயந்திர கோளாறு கூடுவாஞ்சேரியில் பயணியர் தவிப்பு
அரசு பேருந்து இயந்திர கோளாறு கூடுவாஞ்சேரியில் பயணியர் தவிப்பு
அரசு பேருந்து இயந்திர கோளாறு கூடுவாஞ்சேரியில் பயணியர் தவிப்பு
ADDED : ஏப் 20, 2024 12:45 AM

கூடுவாஞ்சேரி:கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து, மதுரைக்கு நேற்று அதிகாலையில் சிறப்பு பேருந்து ஒன்று, 50 பயணியருடன் சென்று கொண்டிருந்தது.
அப்போது, நந்திவரம் அரசு மருத்துவமனை அருகில் வந்தபோது, இஞ்சினில் ஏற்பட்ட பழுது காரணமாக, சாலையிலேயே பேருந்து நின்றுவிட்டது.
பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரும், பல்வேறு முயற்சிகள் செய்தும் பழுதை சரிசெய்ய முடியவில்லை. அதனால், பயணியர் அனைவரையும் சாலையில் இறக்கி, மாற்றுப் பேருந்து வாயிலாக மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.
பேருந்து பழுது காரணமாக, இரண்டு மணி நேரத்திற்கு மேல், குழந்தைகளுடன் பயணியர் சாலையிலேயே செய்வதறியாது பரிதவித்தனர்.
அதன்பின், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து, பணிமனை ஊழியர்கள் விரைந்து வந்து, பழுதான பேருந்தை அங்கிருந்து அகற்றி எடுத்துச் சென்றனர்.