/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையில் சிதறிய ஜல்லிக்கற்கள் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
/
சாலையில் சிதறிய ஜல்லிக்கற்கள் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
சாலையில் சிதறிய ஜல்லிக்கற்கள் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
சாலையில் சிதறிய ஜல்லிக்கற்கள் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
ADDED : ஆக 02, 2024 02:21 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் பகுதி சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மேட்டுப்பாளையம் அருகே சனீஸ்வரன் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே, தேசிய நெடுஞ்சாலை பகுதியில், 50 மீட்டர் துாரத்திற்கு ஜல்லிக் கற்கள் கொட்டி சிதறிக் கிடக்கின்றன.
தேசிய நெடுஞ்சாலை பகுதியில், இருசக்கரவாகனங்கள் ஒதுங்கிசெல்லும் சாலை ஓரத்தில், நேற்று இரவு, ஜல்லிக்கற்கள் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரியிலிருந்து, அவை கொட்டியிருக்கலாம் என, அப்பகுதிவாசிகள்கூறினர்.
இவை, அப்புறப்படுத்தப்படாமல் அப்படியே கிடக்கின்றன. அதனால், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், ஒதுங்கி செல்ல முடியாதவாறு, விபத்து ஏற்படுத்தும்அபாயம் ஏற்படுகிறது.
எனவே, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், சாலையில் கொட்டிக் கிடக்கும் ஜல்லிக்கற்களை, உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.