/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கலெக்டர் அலுவலகம் பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அவசியம்
/
கலெக்டர் அலுவலகம் பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அவசியம்
கலெக்டர் அலுவலகம் பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அவசியம்
கலெக்டர் அலுவலகம் பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அவசியம்
ADDED : மார் 13, 2025 10:29 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் பகுதி, பயணியர் நிழற்குடை பகுதியில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் அலுவலகம், வருவாய் அலுவலகம், கூட்டுறவுத்துறை, வேளாண்மைத் துறை, முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட வழங்கல் அலுவலகம், ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.
இந்த அலுவலகங்களில், 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பணி முடித்து, சொந்த ஊருக்கு செல்ல, பயணியர் நிழற்குடை பகுதியில், இரவு 8:00 மணிக்கு மேல் பேருந்திற்காக காத்திருக்கின்றனர்.
இப்பகுதியில் மின் விளக்கு இல்லாததால், இருள் சூழந்து உள்ளது. இதை பயன்படுத்தி மர்ம நபர்கள், பெண்களிடம் செயின் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் ஈடுபடும் சூழல் உள்ளது.
இந்நிலையில், பயணியர் நிழற்குடை பகுதியில், உயர்கோபு மின் விளக்கு அமைக்க, நெடுஞ்சாலைத் துறை, மாவட்ட காவல் துறைக்கு, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
எனவே, பெண் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, உயர்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.