/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பல இடங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரம் 'மக்கர்' தரையில் அமர்ந்த வாக்காளர் காத்திருந்த வாக்காளர்கள் அவதி
/
பல இடங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரம் 'மக்கர்' தரையில் அமர்ந்த வாக்காளர் காத்திருந்த வாக்காளர்கள் அவதி
பல இடங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரம் 'மக்கர்' தரையில் அமர்ந்த வாக்காளர் காத்திருந்த வாக்காளர்கள் அவதி
பல இடங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரம் 'மக்கர்' தரையில் அமர்ந்த வாக்காளர் காத்திருந்த வாக்காளர்கள் அவதி
UPDATED : ஏப் 20, 2024 01:02 AM
ADDED : ஏப் 20, 2024 01:01 AM

சென்னை:ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், ஓட்டுச்சாவடி 101ல் காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.
இந்த கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி, 50, என்பவர், முதலாவதாக ஓட்டளிக்க சென்றார். ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் பட்டனை அழுத்திய போது, ஓட்டு பதிவாகவில்லை. அதிகாரிகள் சரிபார்த்தபோது, அது பழுதாகி இருப்பது தெரிய வந்தது.
பாலாஜி, தன் விரலில் மை வைத்ததால், 'நான் ஓட்டளித்த பின் தான் வெளியே செல்லுவேன்' எனக்கூறி, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின், ஓட்டுச்சாவடி மையத்தின் தரையில் அவர் அமர்ந்தார். ஓட்டளிக்க வந்த வந்தவர்கள், இயந்திரம் தயாராகும் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து அவதிக்கு உள்ளாகினர்.
தகவல் அறிந்து மாற்று இயந்திரத்துடன் வந்த அதிகாரிகள், பழுதான இயந்திரத்தை சோதனை செய்தனர். இதில், அந்த இயந்தரத்தில் 'சீல்' வைக்கும் போது அரக்கு மெழுகு பட்டனில் பதிந்ததால் இந்திரம் பழுதானது தெரிய வந்தது.
இதையடுத்து மெழுகை அகற்றி, இயந்திரத்தை சரிசெய்த பின், 8:00 மணிக்கு மீண்டும் ஓட்டுப்பதிவு துவங்கியது. ஒரு மணி நேரம் தரையில் அமர்ந்திருந்த வாக்காளர் பாலாஜி, இயந்திரம் சரிசெய்தபின் முதலாவதாக ஓட்டளித்த பின், மையத்தில் இருந்து வெளியேறினார்.
குரோம்பேட்டை, ராதா நகரில் உள்ள செயின்ட் மார்க் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச் சாவடி 178ல், இயந்திரம் பழுதாகி இருந்தது. இதனால், காலை 7:00 மணிக்கு துவக்க வேண்டிய ஓட்டுப்பதிவு, இரண்டு மணி நேரம் தாமதமாக, 9:00 மணிக்கு துவங்கியது.
மேற்கு தாம்பரம் கன்னடப்பாளையம் பள்ளியில், மின்னணு இயந்திரம் பழுதால், அரை மணி நேரம் தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது.
ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிக்குட்பட்ட மதுரவாயல் சட்டசபை தொகுதி காரம்பாக்கம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 88வது பூத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஓட்டு பதிவில் தாமதம் ஏற்பட்டது.
இதனால், வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள் பொறுமையிழந்து வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மதுரவாயல் எம்.எல்.ஏ., கணபதி, இயந்திரத்தில் பழுது சீர் செய்யும் வரை மக்களுடன் காத்திருந்தார். இயந்திரம் சரி செய்யப்பட்டு, 8:10 மணி முதல் ஓட்டுப்பதிவு துவங்கியது.
இதேபோல், வளசரவாக்கம் மண்டல அலுவலகம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 7:40 மணிக்கு ஓட்டு பதிவு துவங்கப்பட்டது. விருகம்பாக்கம் வெங்கடேஷ் நகரில் உள்ள பத்மா சாரங்கபாணி பள்ளியில், 32, 34 என, இரு பூத்தில் இயந்திரம் பழுது காரணமக 8:45 மணிக்கு இயந்திரம் சீர் செய்யப்பட்டு ஓட்டு பதிவு நடந்தது.
இங்கும், பொதுமக்கள் 7:00 மணி முதல் காத்திருந்ததால், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தென் சென்னை தொகுதியில் வேளச்சேரி, கிண்டி, அடையாறு திருவான்மியூர், துரைப்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லுார், பெரும்பாக்கம் பகுதியில் உள்ள, 12 ஓட்டு சாவடிகளில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுது ஆகின.
சில இயந்திரங்களை பொறியாளர்கள் சீரமைத்தனர். சில மாற்று இயந்திரங்கள் வாயிலாக ஓட்டுப் பதிவு நடந்தது.
இதனால், அரை மணி முதல் 2 மணி நேரம் வரை காலதாமதம் ஆனது. இதனால், சில வாக்காளர்கள் விரக்தியில் ஓட்டு போடாமல் வீடு திரும்பினர்.
இதை படம் பிடிக்க சென்ற நாளிதழ், 'டிவி' பத்திரிகையாளர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. தேர்தல் கமிஷன் வழங்கிய அடையாள அட்டையை காட்டியும், குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆதவன் பாலாஜி தடுத்து நிறுத்தினார்.
காவல் உயர் அதிகாரிகள் பேசிய பின், ஓட்டு சாவடிகளை புகைப்படம் எடுக்க அனுமதித்தனர்.
ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதி இருங்காட்டுக்கோட்டை ஓட்டுச்சாவடி மையத்தில் இயந்திரம் பழுதானது. தன் கையில் மை வைத்ததால் ஓட்டளிக்காமல் வெளியே செல்லமாட்டேன் என கூறிய நபர் மையத்தின் தரையில் அமர்ந்தார். ஓட்டளிக்க வந்த மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

