/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு
/
செங்கை மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு
ADDED : ஏப் 24, 2024 01:29 AM

மறைமலை நகர்:செங்கல்பட்டு மொத்த விலை காய்கறி மார்க்கெட், மகேந்திரா சிட்டி அருகில், திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செயல்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இருந்தும், விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
புடலங்காய், சுரைக்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள், மொத்த விற்பனைக்காக இங்கு கொண்டு வரப்படுகின்றன.
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து காரட், பீட்ரூட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்த காய்கறிகளை புறநகர் பகுதி மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சில்லறை விற்பனை வியாபாரிகள் வாங்கி சென்று, தங்களின் பகுதிகளில் விற்பனை செய்கின்றனர்.
காய்கறிகள் வரத்து குறைந்து, சில நாட்களாக காய்கறிகள் விலை ஏறு முகத்தில் உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
கடந்த ஒரு மாதமாக, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால், பந்தல் காய்கறி செடிகளான பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய் உள்ளிட்டவை மகசூல் குறைந்து உள்ளது.
மேலும், அதிகரித்த வெயில் காரணமாக, அதிக அளவில் பூச்சிகள் தாக்கம் ஏற்படுவதால், வழக்கத்தை விட அதிக அளவில் பூச்சி மருந்துகள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

