/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பறிமுதல் மாட்டு வண்டிகளை பொது ஏலம் விட வலியுறுத்தல்
/
பறிமுதல் மாட்டு வண்டிகளை பொது ஏலம் விட வலியுறுத்தல்
பறிமுதல் மாட்டு வண்டிகளை பொது ஏலம் விட வலியுறுத்தல்
பறிமுதல் மாட்டு வண்டிகளை பொது ஏலம் விட வலியுறுத்தல்
ADDED : செப் 11, 2024 12:44 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே படாளம் - திருக்கழுக்குன்றம் செல்லும் மாநில நெடுஞ்சாலையோரம், பழையனுார் ஊராட்சி அமைந்துள்ளது. பழையனுார் ஊராட்சியின் எல்லைப் பகுதியில், பாலாறு செல்கிறது.
இந்த ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட மாட்டு வண்டிகளை, வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்கின்றனர். அவ்வாறு, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, கைப்பற்றப்பட்ட 10க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள், ஊராட்சி அலுவலக கட்டடம் அருகே உள்ள காலி இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால், புதர் வளர்ந்து காணப்படுகிறது.
இப்பகுதிகளில், பத்துக்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். கைப்பற்றப்பட்ட மாட்டு வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ள பகுதி, பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் தங்கும் இடமாக மாறி வருகிறது.
எனவே, வருவாய்த் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டிகளை அப்புறப்படுத்த வேண்டும் என, ஊராட்சி நிர்வாகத்தினர், பல முறை துறை சார்ந்த அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாட்டு வண்டிகள் துருப்பிடித்து வீணாகி வருகின்றன.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், மாட்டு வண்டிகளை பொது ஏலம் விட்டு, அந்த தொகையை அரசு நிதியில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

