/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஒருங்கிணைந்த சேவை திட்டம் மாவட்ட அளவில் குழு அமைப்பு
/
ஒருங்கிணைந்த சேவை திட்டம் மாவட்ட அளவில் குழு அமைப்பு
ஒருங்கிணைந்த சேவை திட்டம் மாவட்ட அளவில் குழு அமைப்பு
ஒருங்கிணைந்த சேவை திட்டம் மாவட்ட அளவில் குழு அமைப்பு
ADDED : ஜூலை 04, 2024 12:47 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட சமூக நலத்துறை சார்பில், ஒருங்கிணைந்த சேவை திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது.
இந்த கூட்டத்தில், 'பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
குடும்பம், பணிபுரியும் இடம், தனிப்பட்ட மற்றும் பொது இடங்களில் வன்முறைக்கு உள்ளாகும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்யும் வகையில், ஒருங்கிணைந்த சேவை மையத்தின் செயல்பாடுகளை கண்காணிக்க, கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான பணிக்குழு அமைக்கப்பட்டது.
மூத்த குடிமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது, விரைவாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண, செங்கல்பட்டு சப்- - கலெக்டர், மதுராந்தகம், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில், உட்கோட்ட தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.
மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு மற்றும் இதர சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய, மாவட்ட அளவிலான முதியோர் நலக்குழு அமைக்கப்பட்டது.
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச் சட்டம் - 2007ன் கீழ் பெறப்படும் அனைத்து மனுக்கள் மற்றும் மேல் முறையீட்டு மனுக்களை, உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும். இந்த மனுக்களுக்கு, இரண்டு மாத காலத்திற்குள் உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.