/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முதியோர், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டுப்பதிவு தீவிரம்
/
முதியோர், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டுப்பதிவு தீவிரம்
முதியோர், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டுப்பதிவு தீவிரம்
முதியோர், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டுப்பதிவு தீவிரம்
ADDED : ஏப் 09, 2024 11:34 PM
திருப்போரூர், திருப்போரூர் சட்டசபை தொகுதியில், 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டிற்கு தேர்தல் அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று, தபால் ஓட்டு சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
லோக்சபா தேர்தலில், 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், 40 சதவீதத்திற்கு மேல் உடல் ஊனம் உள்ள மாற்றுத் திறனாளிகள் வீட்டில் இருந்தே தபால் ஓட்டு அளிக்கலாம் என, தேர்தல் ஆணையம்அறிவித்திருந்தது. காஞ்சி புரம் லோக்சபா தொகுதியில் அடங்கிய திருப்போரூர் சட்டசபை தொகுதியில், 85 வயதுக்கு மேல் உள்ள முதியோர் 231 பேர், மாற்றுத்திறனாளிகள் 220 பேர் என, 451 பேர் உள்ளனர். அவர்களிடம் தபால் ஓட்டு பெறும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.
தபால் ஓட்டுகளை பெற நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுச்சீட்டு, சீல் வைக்கப்பட்ட ஓட்டுப்பெட்டிக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தபால் ஓட்டுகள்பெறப்பட்டு வருகிறது.