/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மலையடிவேண்பாக்கத்தில் நிழற்குடை பணி தீவிரம்
/
மலையடிவேண்பாக்கத்தில் நிழற்குடை பணி தீவிரம்
ADDED : செப் 17, 2024 12:25 AM

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அடுத்த மலையடிவேண்பாக்கம் பகுதியில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் உள்ளது. இப்பகுதியில், சாலையின் இருபுறமும் பேருந்து நிறுத்தங்கள் உள்ளன.
இங்கு, பயணியர் நிழற்குடை இல்லாததால், மழை, வெயில் காலங்களில், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால், பயணியர் நிழற்குடை கட்ட வேண்டும் என, வலியுறுத்தி வந்தனர்.
இதைத் தொடர்ந்து, மேற்கண்ட பகுதியில், தலா ஒரு பயணியர் நிழற்குடை கட்ட, செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி தொகுதி மேம்பாட்டு நிதியில், தலா 25 லட்சம் ரூபாய் என, 50 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து, கலெக்டருக்கு அனுப்பி வைத்தார்.
இப்பணிக்கு நிர்வாக அனுமதி வழங்கி, காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
அதன்பின், டெண்டர் விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள் பணிகளை செய்து வருகின்றனர். மழைக்காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.

