/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தகராறில் ஈடுபட்ட இருவரிடம் விசாரணை
/
தகராறில் ஈடுபட்ட இருவரிடம் விசாரணை
ADDED : மே 20, 2024 10:05 PM
திருப்போரூர்: திருப்போரூரை அடுத்த இள்ளலூர் தனியார் தண்ணீர் கேன் தயாரிப்பு நிறுவனத்தில்ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோகன் ராவத், 48, என்பவர் செக்யூரிட்டியாக பணி செய்து வருகிறார்.
இந்நிறுவனத்திற்கு எதிரே ஹார்டுவேர்ஸ் கடையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த இமயவர்மன், 22, செந்தமிழன், 24, ஆகிய இருவரும் வேலை செய்கின்றனர்.
நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் ஹார்டுவேர்ஸ் கடை ஊழியர் இருவர் நாய் ஒன்றை அடித்து இழுத்துச் சென்றனர். செக்யூரிட்டி சோகன் ராவத், 'ஏன் அடித்து இழுத்துச் செல்கிறீர்கள்' எனக் கேட்டார்.
இதனால், இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், நாயை தண்ணீர் நிறுவனத்தின் வளாகத்தில் போட்டுவிட்டு, செக்யூரிட்டியை தாக்கினர்.
இதில், காயமடைந்த செக்யூரிட்டி சோகன் ராவத், சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தகவல் அறிந்த திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இமயவர்மன், செந்தமிழன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

