/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சோழிங்கநல்லுாரில் பேருந்து நிறுத்த வசதி இல்லாத அவலம்
/
சோழிங்கநல்லுாரில் பேருந்து நிறுத்த வசதி இல்லாத அவலம்
சோழிங்கநல்லுாரில் பேருந்து நிறுத்த வசதி இல்லாத அவலம்
சோழிங்கநல்லுாரில் பேருந்து நிறுத்த வசதி இல்லாத அவலம்
ADDED : மே 26, 2024 09:28 PM
சோழிங்கநல்லுார் : கிழக்கு கடற்கரை சாலை, அக்கரை சந்திப்பில் இருந்து, ஓ.எம்.ஆர்., சோழிங்கநல்லுார் சந்திப்பு செல்லும், கே.கே.சாலை 200 அடி அகலம் உடையது.
இந்த சாலையில் இருந்து, 2 கி.மீ., துாரத்தில், 100 அடி அகலம் உடைய டி.என்.எச்.பி., சாலை உள்ளது. இச்சாலை, ஓ.எம்.ஆர்., குமரன் நகர் சந்திப்பில் சேர்கிறது.
திருவான்மியூர், நீலாங்கரை, அக்கரை பகுதியில் இருந்து, நாவலுார், கேளம்பாக்கம், செம்மஞ்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு துரிதமாக செல்ல, வாகன ஓட்டிகள் டி.என்.எச்.பி., சாலையை பயன்படுத்துகின்றனர்.
டி.என்.எச்.பி., சாலையில், தொழில் நிறுவனங்கள் மற்றும் 5,000த்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த சாலையில், பேருந்து வசதி கிடையாது.
இதனால், சோழிங்கநல்லுார், அக்கரை, குமரன் நகர் சந்திப்பில் இறங்கி, ஆட்டோ பிடித்து, டி.என்.எச்.பி., சாலைக்கு செல்கின்றனர். தனியார் நிறுவனங்கள், வீட்டு வேலை, கட்டட வேலைக்கு செல்லும் மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
கார், ஆட்டோ, பைக், தனியார் பேருந்துகள் அதிகம் செல்கின்றன. சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். ஆனால், மாநகர பேருந்து வசதி இல்லை. இதனால், ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை, போக்குவரத்திற்கு செலவு செய்ய வேண்டி உள்ளது.
திருவான்மியூரில் இருந்து டி.என்.எச்.பி., சாலை வழியாக, செம்மஞ்சேரி, கேளம்பாக்கம், திருப்போரூர் ஆகிய இடங்களுக்கு மாநகர பேருந்து விட்டால், போக்குவரத்து செலவு குறையும். இதற்கு, மாநகர போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

