/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஜல்லி கொட்டி பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாத சாலையால் அவதி
/
ஜல்லி கொட்டி பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாத சாலையால் அவதி
ஜல்லி கொட்டி பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாத சாலையால் அவதி
ஜல்லி கொட்டி பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாத சாலையால் அவதி
ADDED : ஏப் 26, 2024 12:48 AM

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகில் உள்ள சாலையை சீரமைப்பதற்காக, ஜல்லிக்கற்கள் கொட்டிய நிலையில், நீண்ட மாதங்களாக பணிகள் துவங்கப்படாமல் உள்ளன.
இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சாலை, 0.5 கி.மீ., நீளம் உள்ளது. இந்த சாலையை பராமரிப்பதற்காக, ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன.
ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும், இதுவரை எந்த விதமான பணிகளும் நடைபெறவில்லை.
மேலும், புதிதாக வண்டலுார் தாலுகா அலுவலகம் திறக்கப்பட்டு விட்டது. இதனால், இந்த சாலையை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மக்கள் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர்.
குறிப்பாக, கூடுவாஞ்சேரி கிராம நிர்வாக அலுவலகம், நந்திவரம் கிராம நிர்வாக அலுவலகம், கூடுவாஞ்சேரி வருவாய் ஆய்வாளர் அலுவலகம், நந்திவரம் அரசு மருத்துவமனை, கூடுவாஞ்சேரி உதவி கமிஷனர் அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகங்களுக்கு வருகை தரும் மக்கள், இந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் வரும்போது, தடுமாறியும், சிலர் சாலையில் விழுந்து எழுந்தும் செல்கின்றனர்.
இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, 0.5 கி.மீ., நீளமுள்ள இந்த சாலை பணியை விரைந்து முடிக்க, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

