/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தனியார் ஊழியர் வீட்டில் நகைகள், ரூ.3 லட்சம் திருட்டு
/
தனியார் ஊழியர் வீட்டில் நகைகள், ரூ.3 லட்சம் திருட்டு
தனியார் ஊழியர் வீட்டில் நகைகள், ரூ.3 லட்சம் திருட்டு
தனியார் ஊழியர் வீட்டில் நகைகள், ரூ.3 லட்சம் திருட்டு
ADDED : ஜூலை 29, 2024 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்:தாம்பரம் அடுத்த, பீர்க்கங்கரணை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம், 32; தனியார் ஊழியர்.
இவர், குடும்பத்துடன் இரு நாட்களுக்கு முன், திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
ஸ்ரீராம் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை அறிந்த அவர், தன் உறவினர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள், பீர்க்கங்கரணை போலீசாருடன் ஸ்ரீராம் வீட்டிற்கு சென்றனர்.
கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு, 7.5 சவரன் நகை, 3 லட்சம் ரூபாய் திருடுபோனது தெரிந்தது. தடயங்களை சேகரித்த பீர்க்கங்கரணை போலீசார், அப்பகுதி கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து, திருடர்களை தேடி வருகின்றனர்.