/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில் ஆக்கிரமிப்பு பெயர் பலகை அகற்றம்
/
கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில் ஆக்கிரமிப்பு பெயர் பலகை அகற்றம்
கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில் ஆக்கிரமிப்பு பெயர் பலகை அகற்றம்
கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில் ஆக்கிரமிப்பு பெயர் பலகை அகற்றம்
ADDED : மே 15, 2024 10:56 PM

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில், மின்வாரிய அலுவலகம் எதிரே, நடைபாதையை ஆக்கிரமித்து, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக, கடைகளின் பெயர் பலகைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதனால், அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் பெரும் தொந்தரவு ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக, அப்பகுதிவாசிகள் தொடர்ச்சியாக புகார் அளித்து வந்தனர்.
அதன்படி, நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி கமிஷனர் தாமோதரன், பொறியாளர் வெங்கடேசன், சுகாதார துறை ஆய்வாளர் காளிதாஸ் ஆகியோர், நேற்று அப்பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர்.
அதிக அளவிலான ஆக்கிரமிப்புகள் இருப்பது உறுதியான நிலையில், சாலையை ஆக்கிரமித்து நிறுவப்பட்டு இருந்த கடைகளின் பெயர் பலகையை, பொக்லைன் இயந்திரம் வாயிலாக, நகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.
பின், நடைபாதையை சீரமைத்து, அப்பகுதிவாசிகள் மற்றும் பயணியரின் போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்தனர். நகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கைக்கு, அப்பகுதி கடைக்காரர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.