/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புறநகரில் தொடரும் பேனர் கலாசாரம் கட்டுப்படுத்த திணறும் கூடுவாஞ்சேரி நகராட்சி
/
புறநகரில் தொடரும் பேனர் கலாசாரம் கட்டுப்படுத்த திணறும் கூடுவாஞ்சேரி நகராட்சி
புறநகரில் தொடரும் பேனர் கலாசாரம் கட்டுப்படுத்த திணறும் கூடுவாஞ்சேரி நகராட்சி
புறநகரில் தொடரும் பேனர் கலாசாரம் கட்டுப்படுத்த திணறும் கூடுவாஞ்சேரி நகராட்சி
ADDED : ஆக 07, 2024 02:31 AM

கூடுவாஞ்சேரி,
நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி சுற்றுவட்டார பகுதிகளில், எவ்வித அனுமதியும் பெறாமல் விளம்பர பேனர்கள் வைப்பது தொடர்கிறது. அதனால், அவ்வழியாக செல்லும் மக்களும், வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
இது குறித்து, நந்திவரம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:
சாலையோரங்களில் விளம்பர பேனர்கள் வைப்பதை தடுக்க, அரசு கண்டிப்புடன் செயல்பட்டு வருகிறது.
நீதிமன்ற உத்தரவுகளும் பேனர் கலசாரத்திற்கு எதிராக உள்ளது.
இருப்பினும், அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல், சில தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன.
சில நாட்களாக, கூடுவாஞ்சேரி, சீனிவாசபுரம், ஊரப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில், விளம்பர பேனர்கள் அதிகரித்துள்ளன.
அதுமட்டுமின்றி, மின் கம்பங்களை ஆக்கிரமித்து, எவ்வித அனுமதியும் பெறாமல் விளம்பர பேனர்கள் வைப்பது தொடர்கதையாகி வருகிறது.
தற்போது, மழைக்காலம் துவங்கிவிட்டதால், காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சாலையோரம் வைக்கப்பட்டு உள்ள விளம்பர பேனர்களால், நடந்து செல்வோர் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, எந்தவித அனுமதியும் பெறாமல், அனைத்து மின் கம்பங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றி, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.