/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கங்கையம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
/
கங்கையம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
ADDED : மார் 14, 2025 01:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில், கங்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அம்மன் கோபுரம், சுற்றுப் பிரகாரம், மண்டபம், நவகிரகம் ஆகியவை அமைக்கப்பட்டு, திருப்பணி செய்யப்பட்டது.
திருப்பணிகள் முடிவடைந்த நிலையில், கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இதற்கான பணிகளை தீவிரமாக செய்து வந்தனர். இதையடுத்து கும்பாபிஷேக விழா, இன்று காலை 9:00 மணியளவில் நடைபெறுகிறது.
முன்னதாக, நேற்று காலை விநாயகர் வழிபாடுடன் விழா துவங்கியது. இரவு முதற்கால வேள்வி பூஜைகள் நடந்தன. துவக்க விழாவில் சுற்றுவட்டார கிராமத்தினர் பங்கேற்றனர்.