/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சோத்துப்பாக்கம் பாலமுருகன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
/
சோத்துப்பாக்கம் பாலமுருகன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
சோத்துப்பாக்கம் பாலமுருகன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
சோத்துப்பாக்கம் பாலமுருகன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
ADDED : மார் 08, 2025 11:27 PM

மேல்மருவத்துார், மேல்மருவத்துார் அடுத்த சோத்துப்பாக்கம் கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில், ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், இன்று விமரிசையாக நடக்கிறது.
சோத்துப்பாக்கம் கிராமத்தில், அஞ்சூரம்மன் கோவில் அருகே பழமை யான பாலமுருகன் கோவில் உள்ளது.
கோவிலில் புனரமைப்பு பணிகள் செய்ய விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் முடிவு செய்து, திருப்பணிகள் நடைபெற்று வந்தன.
பாலமுருகன், பக்தஆஞ்சநேயர், பரிவாரமூர்த்திகள் மற்றும் நவகிரக தெய்வங்களின் கோவில், கட்டுமான பணிகள்அனைத்தும் முடிவுற்று, மஹா கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து, யாக சாலை அமைக்கபந்தக்கால் நடப்பட்டது.
அதன்படி, கடந்த 7ம் தேதி வெள்ளியன்று,காலை 8:00 மணிக்கு கிராம தேவதை வழிபாடு, மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவ கிரக ஹோமத்துடன், யாக சாலை பூஜைகள் துவங்கின.
பின், நேற்று காலை 8:30 மணியளவில், இரண்டாம் கால யாக சாலை பூஜைகள்,கோபுர கலசம் பதியவைத்தல், ஹோமம், வேத பாராயணம், பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது.
பின், மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜைகள், எந்திர பிரதிஷ்டை, பாலமுருகன் சிலை பிரதிஷ்டை, திரவிய ஹோமம், திருமறை பாராயணம், அஷ்பந்தன மருந்து சாத்துதல் நடந்தது.
இன்று, காலை 7:00 மணிக்கு மங்கல இசை, நான்காம் கால யாக சாலை பூஜைகள், விசேஷ திரவிய ஹோமம், நாடி சந்தனம், தத்வார்ச்சனை, ஸ்பருஷாஹீதி, நாமகரணம், தம்பதி சங்கல்பம், கலச புறப்பாடு நடைபெறும்.
காலை 10:15 மணிக்கு, யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால், விமான கோபுரத்திற்கு மஹா கும்பாபிஷேகம்நடைபெறும்.
பின், 10:30 மணிக்கு மூலவர் பாலமுருகன், பக்த ஆஞ்சநேயர், பரிவார மூர்த்திகள் மற்றும் நவகிரகங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறும்.
தொடர்ந்து, மஹா அபிஷேக அலங்காரம், அர்ச்சனை, தீபாரதனை மற்றும் தீர்த்த பிரசாதம், அன்னதானம் வழங்கப்படும்.
மறுநாள் திங்கட் கிழமை முதல், பாலமுருகனுக்கு தினமும் 48 நாட்கள்மண்டலாபிஷேக பூஜை நடைபெறும்.