/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஏரி உபரிநீர் கால்வாய் பாலம் விரைவில் பயன்பாட்டிற்கு திறப்பு
/
ஏரி உபரிநீர் கால்வாய் பாலம் விரைவில் பயன்பாட்டிற்கு திறப்பு
ஏரி உபரிநீர் கால்வாய் பாலம் விரைவில் பயன்பாட்டிற்கு திறப்பு
ஏரி உபரிநீர் கால்வாய் பாலம் விரைவில் பயன்பாட்டிற்கு திறப்பு
ADDED : ஆக 16, 2024 11:56 PM

சித்தாமூர் : சித்தாமூர் அடுத்த மணப்பாக்கம் கிராமத்தில், புதுப்பட்டு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை, புதுப்பட்டு, புதுக்குடி, விளாங்காடு உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.
சாலை நடுவே, 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஏரியின் உபரிநீர் கால்வாயை கடக்கும் தரைப்பாலம் இருந்தது. மழைக்காலத்தில் ஏரியின் உபரிநீர் கால்வாய் வாயிலாக, மணப்பாக்கம், இல்லீடு, வன்னியநல்லுார், வெண்ணந்தல் உள்ளிட்ட பல்வேறு ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேறியது.
அதனால், கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்படும். இதனால், பல ஆண்டுகளாக அப்பகுதி கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
அதனால், தரைப்பாலத்தை மேல்மட்ட பாலமாக உயர்த்தி அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், ஊரக வளர்ச்சித்துறை சார்பாக, நபார்டு வங்கி நிதி உதவியின் கீழ், 1.98 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 10 மீட்டர் நீளம் மற்றும் 7.5 மீட்டர் அகலம் கொண்ட மேல்மட்ட தரைப்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
சில நாட்களுக்குள் கட்டுமானப் பணிகள் முடிந்து, பருவ மழைக்கு முன் பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

