/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சுகாதார வளாகத்திற்கு பூட்டு பள்ளிப்பேட்டையில் அவதி
/
சுகாதார வளாகத்திற்கு பூட்டு பள்ளிப்பேட்டையில் அவதி
சுகாதார வளாகத்திற்கு பூட்டு பள்ளிப்பேட்டையில் அவதி
சுகாதார வளாகத்திற்கு பூட்டு பள்ளிப்பேட்டையில் அவதி
ADDED : மார் 13, 2025 01:56 AM

அச்சிறுபாக்கம்:பள்ளிப்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், கழிப்பறை புதுப்பித்தல் பணி முடிந்தும், பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளதால், பெண்கள் அவதிப்படுகின்றனர்.
அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிப்பேட்டை ஊராட்சியில், 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
பள்ளிப்பேட்டை காலனி பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்காக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், 6 லட்சம் ரூபாய் மதிப்பில், கழிப்பறை வளாகம் கட்டப்பட்டது.
இந்த கழிப்பறை வளாகம் கழிப்பறை, குளியலறை, தண்ணீர் தொட்டி மற்றும் துணி துவைக்கும் கல் ஆகியவற்றுடன் கட்டப்பட்டது.
இது, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்து, பயன்பாடு இல்லாமல் இருந்தது.
இதையடுத்து, 15வது மாநில நிதி குழு திட்டம் 2021 -- 22ன் கீழ், 1.94 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டது.
பணிகள் முடிவுற்று இரண்டு ஆண்டுகளாகியும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல், கழிப்பறை வளாகம் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இதனால், பெண்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே, புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்ட கழிப்பறை வளாகத்தை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.