/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மட்கி வீணாகும் குப்பை லாரி மதுராந்தகம் நகராட்சி அலட்சியம்
/
மட்கி வீணாகும் குப்பை லாரி மதுராந்தகம் நகராட்சி அலட்சியம்
மட்கி வீணாகும் குப்பை லாரி மதுராந்தகம் நகராட்சி அலட்சியம்
மட்கி வீணாகும் குப்பை லாரி மதுராந்தகம் நகராட்சி அலட்சியம்
ADDED : மார் 02, 2025 11:24 PM
மதுராந்தகம், மதுராந்தகம் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இங்கு லாரிகள் மற்றும் 'டாடா ஏஸ்' வாகனம் வாயிலாக குப்பை அள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக அரசு புதிய லாரிகள், குப்பை வண்டிகள் உள்ளிட்டவற்றை, பல லட்சம் ரூபாய் செலவில் வாங்கி அளித்துள்ளது. பல ஆண்டுகளாக குப்பை அள்ள பயன்படுத்தப்பட்ட ஒரு சில வாகனங்கள், தற்போது செயல்படாமல் பழுதடைந்து உள்ளன.
அந்த வகையில், நகராட்சி குப்பை லாரி ஓரங்கட்டப்பட்டு உள்ளது.
திறந்தவெளியில் இருக்கும் இந்த லாரி, வெயில், மழையில் நாசமாகி, துருப்பிடித்து வீணாகி வருகிறது.
இதே நிலை இன்னும் நீடித்தால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.
எனவே, பயன்பாடு இல்லாமல் நகராட்சி குடிநீர் ஏற்றும் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த லாரியை, பொது ஏலம் விட்டு, விற்பனை வாயிலாக கிடைத்த தொகையை, வேறு வளர்ச்சி பணிக்கு பயன்படுத்தலாம்.
எனவே, நகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.