தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மாமல்லை பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் துவக்கம்

மாமல்லை பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் துவக்கம்

மாமல்லை பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் துவக்கம்


ADDED : ஏப் 08, 2024 04:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2024 04:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில், சி.எம்.டி.ஏ., எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், 90.50 கோடி ரூபாய் மதிப்பில், புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.

திருக்கழுக்குன்றம் சாலை பகுதியில், பகிங்ஹாம் கால்வாய் அருகில், 6.79 ஏக்கர் பரப்பில், இந்த பேருந்து நிலையம் அமைகிறது.

தரைதளத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம், மேல்தளத்தில் பேருந்துகள் நிறுத்துமிடம், பயணியர் காத்திருக்கும் கூடம், கடைகள் உள்ளிட்டவற்றுடன், இந்நிலையம் உருவாகிறது.

முதல்வர் ஸ்டாலின், கடந்த பிப்., 27ம் தேதி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக அடிக்கல் நாட்டி வைத்தார். மார்ச் 13ம் தேதி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், பூமி பூஜையுடன் கட்டுமானப் பணிகளை துவக்கி வைத்தார். தற்போது, நிலத்தடியில் 'பைல்' அமைக்கும் பணிகளை, ஒப்பந்த நிறுவனத்தினர் துவக்கியுள்ளனர்.

ஒப்பந்த நிறுவனத்தினர் கூறியதாவது:

நிலத்தடியில், 40 அடி ஆழம் வரை மணல் உள்ளது. அதற்கும் கீழே தான் பாறை உள்ளது. இந்த ஆழம் வரை, 'பைல்' அமைக்கப்படும்.

நிலத்தடியில் 800க்கும் மேல், 'பைல்' அமைத்து, அடிமட்ட தரைப்பகுதியில், 'புட்டிங்' எனப்படும் கான்கிரீட் தளம் அமைக்கப்படும். ஒவ்வொரு 'பைலிற்கும்' மேல், தேவையான உயரத்திற்கு கட்டுமான துாண்கள் எழுப்பப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us