/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாலாற்று குடிநீர் வழங்க மாமல்லபுரம் மக்கள் எதிர்பார்ப்பு
/
பாலாற்று குடிநீர் வழங்க மாமல்லபுரம் மக்கள் எதிர்பார்ப்பு
பாலாற்று குடிநீர் வழங்க மாமல்லபுரம் மக்கள் எதிர்பார்ப்பு
பாலாற்று குடிநீர் வழங்க மாமல்லபுரம் மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 03, 2025 11:29 PM
மாமல்லபுரம், மாமல்லபுரம் பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இப்பகுதி குடிநீர் பற்றாக்குறையை போக்க, பாலாற்றிலிருந்து குடிநீர் விநியோகிக்க, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாமல்லபுரம் நகராட்சியில், மாமல்லபுரம், வெண்புருஷம், பூஞ்சேரி, பவழக்காரன்சத்திரம், தேவனேரி ஆகிய பகுதிகள், 15 வார்டுகளுடன் உள்ளன. 20,00 பேர் வசிக்கின்றனர்.
பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக, கிழக்கு கடற்கரை சாலை, ஐந்து ரத வணிக வளாகம் உள்ளிட்ட பகுதிகளில், வெவ்வேறு கொள்ளளவில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் உள்ளன. அவற்றில் நீர் நிரப்பி, தினசரி காலை 6:30 மணி முதல், 8:00 மணி வரை, தெருக்குழாய்களில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
தற்போது நிலத்தடி நீர்மட்டம் சரிவு, குடிநீர் பற்றாக்குறை, மோட்டார் பழுது உள்ளிட்ட காரணங்களால், குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்படுகிறது.
தெருக்குழாய்களில் குடிநீர் வழங்க, குறிப்பிட்ட நேரம் இன்றி, அடிக்கடி மாற்றப்படுகிறது. இரண்டு மணி நேரம் வழங்கப்பட்ட குடிநீர், தற்போது அடிக்கடி ஒரு மணி நேரமாக குறைக்கப்படுகிறது. பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகின்றனர்.
இவ்வூர், தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்பகுதியுடன், அருகில் உள்ள எடையூர், வடகடம்பாடி, பட்டிப்புலம், நெம்மேலி, வடநெம்மேலி ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்பட வாய்ப்புள்ளது. அப்பகுதிகளிலும், ஏற்கனவே குடிநீர் பற்றாக்குறை உள்ளது.
நகராட்சிப் பகுதி குடிநீர் தேவையை கருத்திற்கொண்டு, பாலாற்றிலிருந்து, குடிநீர் வழங்கலாம். பாலாற்றிலிருந்து, திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு, மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு, குடிநீர் வழங்கப்படுகிறது.
மாமல்லபுரத்திற்கும் பாலாற்றில் கிணறுகள் அமைத்து, குடிநீர் வழங்க, இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.