/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருநங்கை பேராசிரியையிடம் ஐ - போன் பறித்தவர் கைது
/
திருநங்கை பேராசிரியையிடம் ஐ - போன் பறித்தவர் கைது
ADDED : மார் 03, 2025 11:37 PM

சென்னை, சூளைமேடு, ஆண்டவர் தெருவைச் சேர்ந்தவர் ஜென்சி, 33. திருநங்கையான அவர், தனியார் கல்லுாரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் அதிகாலை, இருசக்கர வாகனத்தில், சூளைமேடு திருவேங்கடம், இரண்டாவது தெரு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவர், அவரை வழிமறித்தார்.
பின், தனது மொபைல் போன் 'ஸ்விட்ச் ஆப்' ஆகிவிட்டது; வீட்டிற்கு போன் செய்ய வேண்டும் என, ஜென்சியிடம் மொபைல் போனை கேட்டுள்ளார்.
ஜென்சி, அவரிடம் இருந்த இரண்டு மொபைல் போனில் ஒரு போனை, இருசக்கர வாகன இருக்கையில் வைத்துவிட்டு, மற்றொரு போனில் உதவி கேட்டவர் கூறிய எண்ணிற்கு டயல் செய்து கொண்டிருந்தார்.
ஜென்சியின் கவனத்தை திசை திருப்பிய நபர், வாகனத்தின் இருக்கையில் வைத்திருந்த ஐ - போனை திருடி தப்பிச் சென்றார். இதுகுறித்து, சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இதில், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சந்துரு, 25, என்பவர் மொபைல் போன் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
நேற்று அவரை போலீசார் கைது செய்து, திருடிய ஐ - போனை மீட்டனர். கைது செய்யப்பட்ட சந்துரு மீது, ஏற்கனவே திருட்டு வழக்கு உள்ளது.