/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திரிசக்தி அம்மன் கோவிலில் இன்று மாசி பிரம்மோற்சவம்
/
திரிசக்தி அம்மன் கோவிலில் இன்று மாசி பிரம்மோற்சவம்
திரிசக்தி அம்மன் கோவிலில் இன்று மாசி பிரம்மோற்சவம்
திரிசக்தி அம்மன் கோவிலில் இன்று மாசி பிரம்மோற்சவம்
ADDED : மார் 02, 2025 11:35 PM
திருப்போரூர், திருப்போரூர் அடுத்த தாழம்பூர் திரிசக்தி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் மாசி பிரம்மோற்சவ விழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தாழம்பூர் ஊராட்சி, கிருஷ்ணா நகரில், புகழ்பெற்ற திரிசக்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில், ஞானசக்தியாக சரஸ்வதி தேவியும், இச்சா சக்தியாக லட்சுமி தேவியும், கிரியா சக்தியாக தாய் மூகாம்பிகையும் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிப்பது தனிச்சிறப்பு.
இக்கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவம் விழா நடைபெற்று வருகிறது.
இந்தாண்டு, விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கி, வரும் 13ம் தேதி, விடையாத்தி உற்சவத்துடன் நிறைவடைகிறது.
முக்கிய விழாவாக, 9ம் தேதி, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, சிறப்பு கல்வி யாக வழிபாடும், மார்ச் 11ம் தேதி தேர்த் திருவிழாவும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.