/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மனவளர்ச்சி குன்றியவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி
/
மனவளர்ச்சி குன்றியவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி
மனவளர்ச்சி குன்றியவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி
மனவளர்ச்சி குன்றியவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி
ADDED : மே 11, 2024 11:46 PM

மாமல்லபுரம்:கல்பாக்கம் அடுத்த ஆயப்பாக்கத்தைச் சேர்ந்த புகழேந்தி மகன் சரண்ராஜ், 16, நல்லாத்துாரைச் சேர்ந்த சிங்காரம் மகன் பிரபாகரன், 15, கூவத்துார் அடுத்த பெருந்துறவைச் சேர்ந்த முருகன் மகன் வசந்தன், 15, ஆகியோர், 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை மனவளர்ச்சி குன்றியவர்கள்.
வாயலுாரில் இயங்கும் அஞ்சாலம்மாள் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி, இவர்களுக்கு கல்வி உள்ளிட்ட பயிற்சி அளிக்கிறது. தற்போது, 10ம் வகுப்பு தேர்வு எழுதி, தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.
ஆங்கில தேர்விற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நான்கு பாடங்கள் எழுதி, சரண்ராஜ் 235 மதிப்பெண், வசந்தன் மற்றும் பிரபாகரன், தலா 209 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து சிறப்பு பள்ளி நிர்வாகி தேசிங்கு கூறியதாவது:
மூன்று பேரும் என்னுடைய சிறப்பு பள்ளியில் பயிற்சி பெற்றனர். வாயலுார், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களாக பதிந்து தேர்வெழுதி தேர்ச்சி பெற்றனர். மனவளர்ச்சி குன்றியவர்கள் என்பதால், ஆங்கில பாடம் விலக்களிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.