ADDED : மார் 01, 2025 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அச்சிறுபாக்கம் :அச்சிறுபாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின், செங்கல்பட்டு மாவட்ட பொதுக்குழு கூட்டம், நேற்று நடந்தது.
மாவட்ட தலைவர் இம்மானுவேல் ஜெயசீலன், மாநில தலைவர் டைமன் ராஜா வெள்ளையன் பங்கேற்றனர். அதில், மே 5ம் தேதி, சென்னையில் 42வது வணிகர் தின விழா, 'வணிகம் காக்கும்' வெள்ளையன், இளைய தலைமுறை 42வது எழுச்சி மாநாடு குறித்து ஆலோசனை நடந்தது.
அதில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வணிகர் சங்கங்களின் உறுப்பினர்கள், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.