/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடைகளுக்கு இழப்பீடு வழங்காததால் வணிகர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
/
கடைகளுக்கு இழப்பீடு வழங்காததால் வணிகர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
கடைகளுக்கு இழப்பீடு வழங்காததால் வணிகர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
கடைகளுக்கு இழப்பீடு வழங்காததால் வணிகர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 12, 2024 11:53 PM

செய்யூர் : செய்யூர் அடுத்த வெண்ணாங்குப்பட்டு பகுதியில், 40க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மாமல்லபுரம்- - புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையை, நான்கு வழிசாலையாக விரிவாக்கம் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்தது.
இதற்காக, 1,270 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதற்கட்டமாக, மாமல்லபுரம் -- முகையூர் 31 கி.மீ., சாலைக்கு, 675 கோடி ரூபாய்; முகையூர் -- மரக்காணம் 31 கி.மீ., சாலைக்கு, 595 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
அடுத்ததாக, மரக்காணம் -- புதுச்சேரி, 32 கி.மீ., சாலை மேம்படுத்தப்பட உள்ளது. இச்சாலை திட்ட பணிகளுக்காக, இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் அளிக்கப்பட்டு, சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.
சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக வெண்ணாங்குப்பட்டு பகுதி, கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட கடைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.
அகற்றப்பட உள்ள கடைகளுக்கு, இழப்பீடு வழங்காமல் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருவதால், வணிகர் சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், வெண்ணாங்குப்பட்டு, கடப்பாக்கம், சூணாம்பேடு, செய்யூர், கூவத்துார் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வணிகர் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

