அடிப்படை வசதிகளை மேம்படுத்த கலெக்டரிடம் எம்.எல்.ஏ., மனு
அடிப்படை வசதிகளை மேம்படுத்த கலெக்டரிடம் எம்.எல்.ஏ., மனு
ADDED : ஜூன் 13, 2026 05:10 PM
செய்யூர், ஜூன் 14-–
செய்யூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த செய்யூர் அ.தி.மு.க., – எம்.எல்.ஏ, ராஜசேகர் செங்ல்பட்டு கலெக்டர் வீரப்பனிடம் நேற்று மனு அளித்தார்.
இந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
செய்யூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நிலத்தடி நீர் உப்பு தன்மையாக மாறி உள்ளது.எனவே கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் ஜே..ஜே.எம்., திட்டத்தில் கூடுதலாக குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். பல ஆண்டுகளாக நத்தம் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
பல ஆண்டுகளாக துார்வாரி சீரமைக்கப்படாமல் உள்ள பாசன வடிகால்வையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்க எடுக்க வேண்டும். கிராமப் புறங்களில் கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்க வேண்டும்.
தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது.
