/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முத்தாலம்மன் கோவில் கும்பாபிேஷகம் விமரிசை
/
முத்தாலம்மன் கோவில் கும்பாபிேஷகம் விமரிசை
ADDED : பிப் 23, 2025 10:37 PM
வேங்கடமங்கலம்:வேங்கடமங்கலம் அடுத்த ரத்தினமங்கலத்தில் உள்ள ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் கும்பாபிேஷகம், நேற்று வெகு விமரிசையாக நடந்தது.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வேங்கடமங்கலம் ஊராட்சி, ரத்தினமங்கலம் கிராமத்தில், ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், கடந்த 1994ம் ஆண்டில் கட்டப்பட்டது. அம்மன் சிலை மண்ணால் செய்யப்பட்டு, வழிபடப்பட்டது.
இந்நிலையில், அம்மனுக்கு கற்சிலை அமைத்து, கோவிலில் புனரமைப்பு பணிகள் செய்து, அஷ்டபந்தன கும்பாபிேஷகம் நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டு, இரு மாதங்களுக்கு முன் அதற்கான பணிகள் துவக்கப்பட்டன.
அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், கடந்த 21ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன், கும்பாபிேஷக பூஜைகள் துவக்கப்பட்டன.
நேற்று காலை 7:00 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, புண்யாஹாவாஜனம், தீபாராதனையுடன் வழிபாடு நடந்து, காலை 9:30 மணி அளவில், கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, வெகு விமரிசையாக கும்பாபிேஷகம் நடந்தது.
இதில் 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர். தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிேஷக பூஜைகள் நடக்க உள்ளன.

