/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நல்லுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.30 லட்சத்தில் புதிய கட்டடம்
/
நல்லுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.30 லட்சத்தில் புதிய கட்டடம்
நல்லுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.30 லட்சத்தில் புதிய கட்டடம்
நல்லுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.30 லட்சத்தில் புதிய கட்டடம்
ADDED : மார் 09, 2025 11:37 PM
செய்யூர், செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட நல்லுார் கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, 50 ஆண்டுகளுக்கு முன் கடுக்கலுார் கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது.
இதன் மூலமாக நல்லுார், கரும்பாக்கம், உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் 2,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.
இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி துணை சுகாதார நிலைய கட்டடம் பழுதடைந்ததால், அங்கன்வாடி மையத்திற்கு மாற்றப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.
புதிய துணை சுகாதார நிலைய கட்டடம் அமைக்க வேண்டுமென கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், இடைக்கழிநாடு பேரூராட்சி 2023-24ம் 15வது நிதி ஆணையம் சுகாதார மானிய திட்டத்தின் கீழ் 30 லட்சத்தில், புதிய துணை சுகாதார நிலைய கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டு கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டது.
70 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த சில வாரங்களில் கட்டுமானப்பணிகள் முழுதும் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.