/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆன்லைனில் நில வகைப்பாடு மாற்ற விண்ணப்பம்
/
ஆன்லைனில் நில வகைப்பாடு மாற்ற விண்ணப்பம்
ADDED : ஏப் 04, 2024 06:09 AM
சென்னை : சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ.,வில் கட்டுமான திட்ட அனுமதி வழங்கும் பணிகள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டன. இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்பட்டன.
இந்நிலையில், ஒற்றைச் சாளர முறைக்கான இணையதளம் உருவாக்கப்பட்டு, கட்டுமான திட்ட அனுமதி பணிகள் அதற்கு மாற்றப்பட்டன. இதன் பின், மனைப்பிரிவு திட்ட அனுமதி பணிகளும், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டன.
இருப்பினும், நில வகைப்பாடு மாற்றத்திற்கான விண்ணப்பங்கள் பெறுதல், ஆய்வு செய்தல் உள்ளிட்ட பணிகள், ஒற்றைச் சாளர முறை இணையதளத்திற்கு மாறாமல் இருந்தன.
இப்புதிய இணையதளத்தில் நில வகைப்பாடு மாற்ற பணிகள், சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டதில், வெற்றி கிடைத்துள்ளது.
இதையடுத்து, நில வகைப்பாடு மாற்ற பணிகள், ஒற்றைச் சாளர முறை இணையதளத்திற்கு மாற்றப்பட்டு உள்ளன.
இவ்வசதியை பயன்படுத்த பொதுமக்கள், கட்டுமான துறையினர், https://onlineppacmda.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

