/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மழைநீர் கால்வாய் பணிகள் விரைந்து முடிக்க உத்தரவு
/
மழைநீர் கால்வாய் பணிகள் விரைந்து முடிக்க உத்தரவு
ADDED : மே 25, 2024 12:23 AM

செங்கல்பட்டு:ஆலப்பாக்கம் ஊராட்சியில், மழைநீர் கால்வாய், குடிநீர் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு, கூடுதல் கலெக்டர் அனாமிகா உத்தரவிட்டார்.
ஆலப்பாக்கம் ஊராட்சியில், மலையடிவேண்பாக்கம் பகுதியில், மழைநீர் வடிகால்வாய் பணி நடைபெற்று வருகிறது.
அதேபோல், இருங்குன்றப்பள்ளி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க, பாலாற்று பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை, கூடுதல் கலெக்டர் அனாமிகா, நேற்று முன்தினம் பார்வையிட்டார். அதன்பின், பாலாற்றில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு பகுதியில், கான்கிரீட் சுவர் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆலப்பாக்கம் மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, வட்டார வளர்ச்சி அலுவலர், பொறியாளர்களுக்கு, கூடுதல் கலெக்டர் அனாமிகா உத்தரவிட்டார்.

